Skip to main content

தமிழ்நாட்டில் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Puthumai Pen Thittam to start on Sep 5; Arvind Kejriwal will inaugurate

 

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கு புதிய பெயர் சூட்டி செப் 5ல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

 

மார்ச் மாதம் 18ம் தேதி தமிழக அரசு 2022- 2023ம் ஆண்டுக்காக தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள்  இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக 698 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

 

இதன் படி இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்ற பெயர்சூட்டி உள்ள தமிழக அரசு செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கிவைக்க உள்ளார். 

 

முதல்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதற்கான அழைப்பிதழை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துவதற்காக சென்னை வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நேற்று சென்னை வந்தடைந்த நிலையில், இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது. அவருடன் தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரும் சென்னை வந்துள்ளனர்.

முதற்கட்டமாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் இன்று பிற்பகல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Next Story

‘மணற்கேணி’ இணையதளம் தொடக்கம்!

Published on 22/02/2024 | Edited on 23/02/2024
Launch of 'Manalkeni' website

பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த மணற்கேணி செயலி தற்போது புதிய வடிவமெடுத்திருக்கிறது. அதாவது காணொளிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணும் வகையில் மணற்கேணி இணையதளத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (22.02.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் ஆர்,சுதன் ராமசாமி, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

https://manarkeni.tnschools.gov.in என்ற மணற்கேணி இணையதளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை பல பாடப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களை கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் பாடப்பொருள்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

Launch of 'Manalkeni' website

6, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பாடப்பொருள்கள் காணொளியாக தரப்பட்டுள்ளன. அலைபேசியில் மணற்கேணி செயலியை ப்ளே ஸ்டோரில் இதுவரையிலும் 2,00,000 முறை இச்செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்ட மணற்கேணி இணையதளம் வாயிலாக இன்னும் அதிகமானோரை இக்காணொளிகள் சென்று சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.