Skip to main content

போலி ரசீது; அரசு குவாரி மணல் கடத்தல் அம்பலம்; துணை போகும் அதிகாரிகளை காப்பாற்றும் உயர் அதிகாரிகள்

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

 

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் வெள்ளாற்றில் தினசரி 300  டாரஸ் லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. பொக்கலின், லாரிகள் பகலில் கரை ஓரங்களில் காத்திருக்கும். இரவில் ஆற்றுக்குள் கடத்தலில் ஈடுபடும். எத்தனையோ புகார்கள், நீதிமன்ற உத்தரவுகள்.. எதற்கும் அறந்தை பகுதி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு நாளும் பல லட்ச ரூபாய் மணல் கடத்தல் காரர்கள் மாமூலாக கொடுப்பதால் மாதம் ஒரு லாரியை பிடித்து வழக்கு போடுவதுடன் சரி. மற்ற நாட்களில் மக்களுக்கும், அரசுக்கும் கணக்கு காட்ட பிழைப்புக்காக மாட்டுவண்டிகளில் மணல் அள்ளும் தொழிலாளிகளை பிடித்து வழக்குப் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

lo

  

 இந்த நிலையில் தான் அறந்தாங்கி பெருங்காடு அரசு குவாரியில் இருந்து வெளியூர்களுக்கு போலி ரசீது மூலம் மணல் கடத்தல் நடப்பதை சமூக ஆர்வலர்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகாராக சொன்னார்கள். வழக்கம் போல அமைதியாக இருந்த வருவாய் துறையினர் செவ்வாய் கிழமை மாலை காரைக்குடி சாலையில் சென்ற ஒரு மணல் லாரியை நிறுத்தினார்கள். அந்த லாரி ஓட்டுநர் ஒரு ரசீதை காட்டினார். அந்த ரசீதில் டி.என்.34 ஆர். 0781 என்ற பதிவு எண் இருந்த்து. ஆனால் பிடிபட்ட லாரி எண்ணோ டி.என். 88 1873. அதனால் போலியாக ரசீது தயாரித்து அரசு குவாரியில் இருந்து மணல் திருடப்பட்டு சென்றது தெரிய வந்தது.

 

இது சம்மந்தமாக அறந்தாங்கி வட்டாட்சியர் சூர்யபிரபு அறந்தாங்கி காவல் நிலையத்தில் போலி ரசீது போட்டு மணல் கடத்தல் என்றும் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் புதுக்கோட்டை குழந்தைசாமி மகன் நித்தியராஜ், காயாம்பட்டி கருப்பையா மகன் அடைக்கலம் ஆகியோரையும் பிடிபட்ட லாரியையும் ஒப்படைத்தார். ஆனால் போலி ரசீது என்று தெரிந்தும் இந்த லாரிக்கு மணல் ஏற்றி அனுப்பி மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குவாரி பொருப்பு அதிகாரி மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று ஒரு பெண் காவல் அதிகாரி போராடியும் அவருக்கு மேல் உள்ள மாவட்ட அளவிலான அதிகாரிகள் அதெல்லாம் வேண்டாம் என்றும் பிரச்சனை பெரிதாகும், எதிர்கட்சிகள் தேர்தல் நேரத்தில் பெரிதாக்குவார்கள் அரசுக்கு அவப் பெயர் என்று சமாதானம் சொல்லி மணல் கடத்தலுக்கு துணையாக செயல்பட்ட அதிகாரிகளை வழக்கில் இருந்து மீட்டுள்ளனர்.

 

இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும் போது... அறந்தாங்கி தாலுகாவில் மட்டும் வெள்ளாற்றில் தினசரி இரவில் மணல் கடத்தல் நடக்கிறது. அதை வருவாய்துறை மற்றும், பொதுப்பணித்துறை, காவல் துறை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆறு முற்றிலும் மணல் திருடப்பட்டு வேலிக்கருவை படர்ந்துகிடக்கிறது. நிலடித்தடி நீரும் ரொம்ப கீழே போய்விட்டது. குடிக்க கூட தண்ணீர் கிடைக்கல. ஆனால் அதிகாரிகள் அதைப்பற்றி கவலைப்படல. எல்லாம் மாமூல் தான். இந்த அதிகாரிகள் வாங்கும் மாமூல் பணத்தில் எவ்வளவு நாளைக்கு தண்ணீர் வாங்கி குடிக்கமுடியும். தண்ணீரே இல்லை என்றால் எதை குடிப்பாங்க. 

 

அதே போல தான் பெருங்காடு அரசு குவாரியிலும் அளவுக்கு அதிகமாக ஆழமாக மணல் வெட்டி அள்ளப்படுகிறது. அதைவிட அங்கே இருக்கும் அதிகாரிகளே போலியாக ரசீது தயாரித்து ஏதாவது ஒரு லாரி எண்ணை போட்டு டாரஸ் லாரிகளுக்கு பணத்தை வாங்கிட்டு மணல் ஏற்றி அனுப்புறாங்க. அவங்களும் ரசீது இருக்குன்னு காட்டிகிட்டே போயிடுவாங்க.

 

அப்படி போன ஒரு லாரியை தான் டி.எஸ்.பி. கோகிலா டீம் பிடித்தார்கள். அந்த லாரி ஓட்டுநர், ஓனர் பேர்ல வழக்கு போடுறதோட போலி ரசீதுக்கு மணல் ஏற்றி அனுப்பிய அதிகாரிகள் மீதும் புகார் கொடுத்தால் தான் அடுத்து இதுபோல தவறு செய்ய மாட்டாங்கனு சொல்றாங்க. ஆனா  அவருக்கு மெல இருக்கிற மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளே.. அதிகாரிகளை இதில் சிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லி அவங்க பெயர்களை சேர்க்கல. இப்படி திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகளை காப்பாற்றும் போது அடுத்து உள்ள அதிகாரிகளும் அதே திருட்டுக்கு துணை போகத்தான் செய்வார்கள். அப்பறம் எப்படி மணல் திருட்டை தடுக்க முடியும், நிலத்தடி நீரை சேமிக்க முடியும் என்றனர் விரக்தியாக.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி; அதிகாலையில் நிகழ்ந்த விபத்து

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Overturned truck on tracks; An early morning accident

கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி தமிழக எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளாவில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. விபத்தை அறிந்தவர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதியில் அதிகாலையில் அதிகமான ரயில் போக்குவரத்துகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலிருந்து 4 மணிக்கு புறப்படும். அந்த ரயில் இந்த விபத்து காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது. இருப்பினும் மூன்று மணி நேரம் தாமதமாக எழும்பூர்-கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.