Skip to main content

''போட்டது மைக்... ஆனால் உடைஞ்சது என்னவோ...''- பார்த்திபன் உருக்கம்!

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

'' Put Mike ... but what's broken is my mind '' - Parthiban melts!

 

அண்மையில் 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே மேடையில் இந்த நிகழ்வுக்காக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.

 

actor

 

அந்த வீடியோவில் பேசிய பார்த்திபன், ''என் பிரியமானவர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம். 'மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன் இவ்வளவு அகங்காரம் தேவையா?' இதுபோன்று இன்று யூடியூப்பில் வைரலாக பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. தூக்கிப் போட்டது மைக் ஆனால் உடைந்தது என்னமோ என்னோட மனசு. நேற்றிலிருந்து அது சம்பந்தமான குழப்பம். அது சரியா தவறா? என்ன நடந்துகொண்டோம்... இது நடிப்பா? இல்ல வைரல் ஆக வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்படா? என்ற பேச்சு போகிறது. ஆனால் அது மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. வெறும் ஒரு சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டது என்பது மட்டுமில்லாமல் மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன் என்றவுடன் பரபரப்பாகிவிட்டது. என்ன நடந்தது தெரியல எனக்குள்ள ஏகப்பட்ட டென்ஷன். அங்கு நடந்த விஷயத்திற்காக நான் உடனே ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு மன்னிப்பு கேட்டு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தேன். ரோபோ சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஏனென்றால் இது எனக்குள் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. சில தவறுகள் நடக்கும் பொழுது பின்னோக்கி சென்று கரெக்ட் பண்ண முடியாது. நீங்களெல்லாம் பார்த்திருப்பீங்க நானே ஒரு சின்ன பையன் மாதிரி இறங்கி எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கும்போது அந்த கோபம் எழுவது நியாயமானது. இருந்தாலும் நியாயப்படுத்த விரும்பவில்லை. அந்த தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“வெளியான முதல் நாள் கூட்டமே இல்லை...” - பார்த்திபன்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
parthiban spoke about his teenz movie

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, ‘டீன்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், இந்தியன் 2 படத்தோடு கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

டீன்ஸ் படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு குறித்து பார்த்திபன் நெகிழ்ச்சியடைந்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உங்களின் அளவில்லாத ஆதரவிற்கு நன்றி. நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான், என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது. நேற்று டீன்ஸ் திரையரங்குகளில் அலைமோதிய அன்பு  கண்களை கடலாக்கியது. வெளியான முதல் நாள் கூட்டமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை. 

எத்தனை ஸ்கீரின்? எவ்வளவு கலெக்‌ஷன் ? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை. போதும் இந்த ஆனந்தக் கண்ணீர். கோடிகளை(2) என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை. பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப் படுத்துகிறது. தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். இப்படத்தை தொடர்ந்து பார்த்திபன், ‘52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படமும், இரண்டு படங்களையும் இயக்கவிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. 

Next Story

“இந்தியன் 2வை இருமுறை பார்த்துவிட்டாவது என் படத்தைப் பாருங்கள்” - பார்த்திபன் வேண்டுகோள்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Parthipan pleads At least watch Indian 2 twice and watch his film

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், இந்தியன் 3 அதாவது மூன்றாம் பாகமாகவும் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

அதே வேளையில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, ‘டீன்ஸ்’ படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம், இந்தியன் 2 வெளியாகும் அதே தேதியான ஜூலை 12ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. பார்த்திபன் இயக்கியிருந்த இப்படத்தில் டி.இமான் இசையமைத்திருக்கிறார். 

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டாவது தன் படத்தை பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நண்பர்களே! இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன் ஆனால், எனக்கு நீங்களே! இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் டீன்ஸ்! 12/07/2024 அன்று முதல்…

முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள், சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே களத்தில் நிற்கிறேன். நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை ரிசர்வேஷன் தொடங்கிய உடனேயேக் காட்டுங்கள். நானே கமல் சாரின் தீவிர ரசிகன்தான். INDIAN-2-வை (இந்தியன் 2) இருமுறை பார்த்து விட்டாவது நம் TEENZ-ஐ (டீன்ஸ்) கண்டு கொள்ளுங்கள். TEENZ (டீன்ஸ்) அனைவரும் INDIAN-ஐ (இந்தியன்) பார்த்து பாராட்டி மகிழ வேண்டும். அதே போல INDIANs (இந்தியர்கள்) அனைவரும்  TEENZ-ஐ (டீன்ஸ்)…! உளப்பூர்வமான இவ்வேண்டுகோளை மீறிய விளம்பரம் நானென்ன செய்திட முடியும்? இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு முதலில் ஷேர் செய்யுங்கள் Please!(ப்ளீஸ்)” எனப் பதிவிட்டுள்ளார்.