Skip to main content

நிரம்பி வழியும் புல்லூர் தடுப்பணை; தமிழக விவசாயிகள் வேதனை!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Pugalur barrage across the river was full

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளிலும் எல்லையை ஒட்டி உள்ள வனப்பகுதியிலும் பெய்து வரும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  தமிழக ஆந்திரா எல்லையில் புல்லூர் கிராமத்தில் உள்ள பெரும்பள்ளம் என்ற இடத்தில்  பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள 12 அடி உயர தடுப்பணை முழுவதும் நிரம்பியுள்ளது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 12 அடி தடுப்பணை கட்டியதால் பாலாற்றில் செல்லக்கூடிய வெள்ள நீர் அந்த தடுப்பணையில் தேங்கி நிற்கிறது. பாலாற்றில் தடுப்பணை கட்டாமல் இருந்திருந்தால் தமிழக பாலாற்றில் அதிக அளவு நீர்வரத்து இருந்திருக்கும் தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டியிருந்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீர் சேமித்து வைத்திருக்க வசதியாக இருந்திருக்கும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

விவசாய பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்பு; கலைஞர் விழாவில் 200 விவசாயிகளுக்குப் பண்ணைக்கருவிகள்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Farm implements for farmers at kalaignar centenary function

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியிலுள்ள 200 விவசாயிகளுக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது 84, 85-வது மாத ஊதியத்திலிருந்து 2,10,000 ரூபாய் மதிப்பீட்டில் பண்ணைக்கருவிகள், தார்பாய்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமாரும் கலந்துகொண்டார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது உரையில் “விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கலைஞர்  ஆட்சியில்தான் இந்தியாவில் முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், நேரடி நெல் கொள்முதல் மையம் உருவாக்கி விவசாயிகளின் நலனைக் காத்தவர் கலைஞர். அதுபோல்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை செய்துள்ளார். தற்போது வரவிருக்கும் விவசாய பட்ஜெட்டை, விவசாய பெருமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.   

Farm implements for farmers at kalaignar centenary function

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி.  “வாடிய  பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர்களின் கூற்றுப்படி பயிர்களை வாடாமல் பார்த்துக்கொள்ளும் விவசாயப் பெருமக்களாகிய தங்கள்  அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்”எனப் பேசினார்.  

Next Story

ஆந்திரா துணை முதல்வராகப் பதவியேற்ற பவன் கல்யாண்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
pawan Kalyan sworn in as Deputy Chief Minister of Andhra Pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. 

அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராகவும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல்; சுற்றுச்சூழல், காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் இன்று (19-06-24) ஆந்திராவில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.