கடந்த மாதம் மலேசியாவில் இருந்து வந்து திருப்பூரில் தங்கி இருந்த இளைஞர் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவரை தனிமையில் இருக்கச் சொன்னதால் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

pudukkottai youth incident coronavirus peoples

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சில வருடங்களாக மலேசியாவில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு வந்தவர் திருப்பூரில் தங்கி இருந்துள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கு வந்த இளைஞரை 14 நாட்களுக்கு தனி அறையில் தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதையடுத்துசில நாட்களாக தனிமையில் இருந்த இளைஞருக்கு வீட்டில் இருந்து உணவு கொடுக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் இன்று (27/03/2020) காலை அந்த இளைஞர் தங்கியிருந்த தனி அறை நீண்ட நேரம் திறக்கப்படாத நிலையில் உறவினர்கள் வந்து பார்த்த போது இளைஞர் சடலமாக தூக்கில் தொங்குவது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.