Skip to main content

தனிமையில் இருக்கும் இளைஞர்களுக்கு புத்தகம் வழங்கிய வருவாய் துறையினர்!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

கரோனா கிருமி தொற்றில் இருந்து தப்பிக்க ஒரே வழி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுதான். அதனால் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்த நிலையில் தான் வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினர், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

 

 

pudukkottai government officers visit homes has give books


புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தனிபை்படுத்திக் கொண்டுள்ளனர். தனிமையில் இருப்பவர்கள் தொடர்ந்து கரோனா பற்றிய செய்திகளை பார்த்து அச்சப்படுவார்கள், இதனால் மன உளைச்சல் ஏற்படும் என்பதால் கிராம நிர்வாக அலுவலர் ராஜா தலைமையிலான வருவாய் துறையினர் அனைவர் வீடுகளுக்கும் சென்று அவர்களை கண்காணித்து விசாரணை செய்ததுடன் அவர்களின் மனநிலையை பாதுகாக்கும் பொருட்டு நல்ல புத்தகங்களை வழங்கினார்கள்.

 

h



இது குறித்து வருவாய் துறையினர் கூறும் போது, "அனைத்து செய்திகளும் கரோனா பற்றியே வெளிவருவதால் தனிமையில் உள்ளவர்கள் அதைப்பார்த்து உளவியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தான் நல்ல புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லி வருகிறோம்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

“அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது” - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

“Encroachment of government lands on the rise” - High Court Madurai Branch

 

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சையது அலி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “அரசு அதிகாரிகள் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்வால் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது.

 

ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் சொத்துகளை ஆக்கிரமிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். அதே சமயம் பொதுச் சொத்துகளைப் பாதுகாத்து மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை” எனத் தெரிவித்தார்.