Skip to main content

இளைஞர்களின் முயற்சிக்குக் கிடைத்த பலன்... சிறப்பாக வளரும் குருங்காடு!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

pudukkottai district youths trees small forest

 

'கஜா' புயல் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒட்டு மொத்த மரங்களையும் அடியோடு சாய்த்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியதுடன் சோலை வனமாக இருந்த பூமியைப் பாலை வனமாக மாற்றிவிட்டுச் சென்றது.

 

இந்த நிலையில் தான் கிராமங்களில் இருந்து புறப்பட்ட வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்த இளைஞர்கள் உள்ளூர் இளைஞர்களுடன் கை கோர்த்து முதலில் அந்தந்த கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைச் செய்யத் தொடங்கினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் 'கிரீன் நீடா' அமைப்பு பல்வேறு அமைப்புகளையும், தன்னார்வலர்களையும், அரசு அலுவலர்களையும் இணைத்துக் கொண்டு கிராமங்களில் மட்டுமின்றி மன்னார்குடி- நீடாமங்கலம் சாலையில் 13 கி.மீ தூரத்திற்கு மரப் போத்துகளை நட்டு சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர். மரக்கன்றுகளைவிட வேகமாக மரப் போத்துகள் வளர்ந்து வருகிறது.

 

pudukkottai district youths trees small forest

 

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சாலை ஓரங்களில் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நெடுஞ்சாலை துறை மூலம் நட்டாலும் பல சாலைகளில் பராமரிப்பு இல்லை. ஆலங்குடி உட்கோட்டத்தில் சாலைப் பணியாளர்களின் துரித சேவையால் வேகமாக வளர்கிறது மரக்கன்றுகள். மற்றொரு பக்கம் இளைஞர்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து பல்வேறு தரப்பிலும் உதவிகள் பெற்றும், சொந்தச் செலவிலும் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர். இதனால் பல கிராமங்களில் ஏரி, குளங்கள் சீரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு தண்ணீர் நிரைந்திருந்தது. 

 

புதுக்கோட்டை- தஞ்சை மாவட்டங்களில் உள்ள நான்கு தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட 'கைஃபா' என்ற அமைப்பு பல்வேறு தரப்பிலும் உதவிகள் பெற்று பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் கிடந்த பல நீர்நிலைகளைச் சீரமைத்து தண்ணீரை நிரப்பியதுடன் கரைகளில் மரக்கன்றுகளையும் நட்டனர். 

 

pudukkottai district youths trees small forest

 

அதில் ஒன்று பேராவூரணி பெரிய குளம் எரி. ஏரியைச் சீரமைத்து ஏரிக்குள் 3 குருங்காடுகள் அமைத்து அதில் பலமரக்கன்றுகளையும் நட்டு அதனைப் பராமரிக்க பெண்களையும் நியமித்தனர். ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் தற்போது அந்த மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து காடுகளைப் போல காட்சி அளிக்கத் தொடங்கிவிட்டது. இங்கு குருவிகள், பறவைகள் வந்து செல்ல வசதியாக பழ மரக்கன்றுகளும் நடப்பட்டிருப்பதால் பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிட குருவிகள் வந்து செல்கிறது. அந்தப் பறவைகள், குருவிகள் மூலம் இன்னும் நிறைய விதைகள் விதைக்கப்பட்டு மரங்கள் உருவாகும் என்கிறார்கள் கைஃபா அமைப்பினர். 

 

pudukkottai district youths trees small forest

 

இதேபோல ஒட்டங்காட்டிரும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு சார்பிலும் ஏரி சீரமைக்கப்பட்டு குருங்காடு வளர்க்கப்பட்டு வருகிறது. இப்படி ஏரிகளின் நடுவில் குருங்காடுகள் அமைப்பதைக் கிராமங்கள் தோறும் வரிவுபடுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியில் குடிமராமத்து மூலம் மராமத்து செய்யப்பட்டு வரும் ஏரிகளில் குருங்காடுகள் அமைக்கவும் கிராமத்தினர் திட்டமிட்டுள்ளனர். புயலில் இழந்த மரங்களை மீட்கும் முயற்சியில் இளைஞர்கள் களமிறங்கி இருப்பதால் மரங்களும் வேகமாக வளர்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீராணம் ஏரியில் நச்சுக்கலப்பா? அதிகாரிகள் விளக்கம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Officials have explained that there is no bad liquid in Veeranam Lake

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம் வட்டப்பகுதிகளில் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த ஏரியில் நச்சு கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கடந்த 2018-19 ஆண்டில் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுகள் இருக்க கூடாது என உலக சுகாதார மையம் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் வீராணம் ஏரியில் 1 லிட்டர் நீரில் 17.72 மைக்ரோகிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபனிடம் கேட்டபோது, “வீராணம் ஏரியை சுற்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை, நச்சுகழிவுகள் கலக்க வாய்ப்பில்லை. இவர்கள் தண்ணீர் மிகவும் குறைந்த நேரத்தில் எடுத்துள்ளார்களா? என்று தெரியவில்லை. தற்போது வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் நல்ல முறையில் உள்ளது. இதனை விவசாயத்திற்கு அளித்து வருகிறோம். தண்ணீர் குறித்த ஆய்வை நாங்கள் மேற்கொள்ள முடியாது” என்றார்.

இந்த தகவல் குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் செயற்பொறியாளர் ராம்ஜியிடம் கேட்டபோது, “ஒவ்வொரு முறையும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும்போது தண்ணீரை பலமுறைகளில் சுத்திகரித்து அனுப்பி வருகிறோம். வீராணம் ஏரியில் எந்த ஒரு நச்சும் இல்லை. எனவே தண்ணீரை சோதனை செய்து தான் எடுக்கிறோம்” என்றார்.

அதேபோல் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் உதவிப்பொறியாளர் அனந்தராயன் கூறுகையில், “வீராணம் ஏரியை சுற்றி எந்த நச்சு கழிவுகள் கலக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த தகவல் வெளிவந்த பிறகு பொதுமக்களுக்கு அச்சத்தை தீர்க்கும் வகையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை சாம்பிளுக்கு எடுத்துச் சென்று ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம். ஆய்வகத்தில் இருந்து ரிசல்ட் வந்தவுடன் இதுகுறித்து முழுத்தகவலும் வெளியிடப்படும்” என்றார்.

வீராணம் ஏரியில் நச்சு உள்ளது என்ற தகவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனை விரைவில் மாவட்ட நிர்வாகம் கலைய செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

அதிகாலையில் உடைந்த ஏரி; குடியிருப்புகளை சூழ்ந்த நீர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

NN

 

குன்றத்தூரில் நள்ளிரவில் ஏரி உடைந்ததால் பல வீடுகளை நீர் சூழ்ந்து தேங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்துள்ள நடுவீரப்பட்டு ஏரியில் இன்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்தது. அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் நிகழ்ந்த ஏரி உடைப்பில் நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஏரிகள் அதிகப்படியாக நிரம்பி இருந்தது. இந்தநிலையில், குன்றத்தூரில் ஏற்பட்ட இந்த ஏரி உடைப்பு அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்கிரமிப்பு நபர்களால் ஏரி உடைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.