Skip to main content

புதுக்கோட்டை அமமுகவினர் திமுக நோக்கி பயணம்!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அமமுகவின் அரசியல் கூடாரத்தில் சேதாரம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கட்சியின் முன்னனி பிரமுகர்கள் என்று அறியப்பட்ட அனைவரும் மாற்று இயக்கங்களை நோக்கி பயணித்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ நான் அதிமுகதான் அமமுக இல்லை என்று சொல்லிவந்த நிலையில், தன்னை அதிமுக எம்எல்ஏதான் என்பதை உறுதிப்படுத்த முதல்வர் எடப்பாடியை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்துவிட்டு வெளியேவந்து என்னை சகோதரர்  விஜயபாஸ்கர் தான் மீண்டும் கொண்டு வந்து இணைத்தார் என்றார்.

 Pudukkottai AMMK travel towards DMK


தேர்தலுக்கு முன்பே புதுக்கோட்டை வடக்கு மா.செ சண்முகநாதனை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் எடப்பாடியை சந்திக்க வைத்தார். இப்படி புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பலரும் அமமுகவில் இருந்து அதிமுக செல்லும் நிலையில் மீண்டும் மாவட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் அமைச்சர் மீது உள்ள வெறுப்பில் திமுக பக்கம் செல்ல தயாராகி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திமுக புள்ளிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இவர்களுக்கிடையே கலைஞரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.அறந்தாங்கி ரெத்தினசபாபதி அமமுக பக்கம் சாய்ந்ததும் அவரது சொந்த ஊராட்சியில் உள்ள அம்பலவாணனேந்தல் கிராமத்தில் ஜெ.வால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு நிதியும், மருத்துவர், செவிலியர் நியமிக்கப்பட்ட நிலையிலும் கூட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை முடக்கி வைத்துள்ளார் அமைச்சர் என்ற குற்றச்சாட்டு கடந்த வாரம் வரை எழுந்து மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணிப்போம் என்று பதாகை வைத்தார்கள். 

 

 

 Pudukkottai AMMK travel towards DMK


அதேபோல ஏம்பல் கிராமத்தில் ஐடிஐ வருவதையும் தடுத்து வைத்துள்ளார் அமைச்சர் என்றும் பல்வேறு நலத்திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகளை அமமுக மா.செ கார்த்திகேயன் பகிரங்கமாக எழுப்பினார். இப்படியான நிலையில் எம்எல்ஏவை முதல்வரை சந்திக்க தை்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இப்போது எம்எல்ஏவுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து மீண்டும் இணைய வைத்திருந்தாலும் இனியாவது கிடப்பில் போடப்பட்ட மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்தினால் சரி என்கிறார்கள் தாகுதி மக்கள்.

எப்படியோ இன்னும் சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட அமமுகவில் உடைப்பும் திமுகவில் இணைப்பும் ஏற்படலாம். புதிவர்களை இணைந்தால் உ.பிகள் ஏற்பார்களா என்று திமுக தலைமை முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்களாம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரவுடி என்கவுண்டர்; ஆயுதங்களை ஒப்படைத்த போலீசார்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024

 

Rowdy Encounter; Surrender of arms to court

 

தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் திருச்சி ரவுடி வண்ணாரப்பேட்டை துரை என்கிற துரைசாமி  என்கவுண்டர். கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் - வம்பன் இடையே தனியார் வேளாண் கல்லூரி எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான தைலமரக்காட்டில் ரவுடி துரை என்கவுண்டர்  செய்யப்பட்டார்.

இது குறித்து ஆலங்குடி போலிசாரின் முதல் தகவல் அறிக்கையில்,  'திருவரங்குளம் - வம்பன் இடையே உள்ள தைலமரக்காட்டில் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையா தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மறைந்திருந்த திருச்சி ரவுடி வண்ணாரப்பேட்டை துரை என்கிற துரைசாமி மற்றுமொரு நபர் போலீசாரை தாக்க முயன்ற போது போலீசார் சரணடையச் சொல்லியும் கேட்காமல் துரை நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டார். அரிவாளை காட்டி மிரட்டியதோடு பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை முயன்றார். ஆய்வாளர் முத்தையா தற்காப்பிற்காக சுட்டதால் ரவுடி துரை உயிரிழந்தார்.

உடனிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார்' என பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பவ இடத்தை தொடர்ந்து போலீசார் பாதுகாத்து வரும் நிலையில் ரவுடி துரையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிங்கிள் பேரல் துப்பாக்கி மற்றும் அரிவாளை ஆலங்குடி போலீசார் இன்று ஆலங்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் சம்பவ இடத்தை மனித உரிமை அமைப்பினர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் பாதுகாப்பு தொடர்கிறது.

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.