கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமேனன் , தலைமை காவலர்கள் நாகப்பிள்ளை, தெய்வமகன், ரகுராமன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து சேலம் செல்லும் பேருந்தில் தனியாக ஒரு பை இருந்தது. அந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அந்த பையில் 9,60,000 ரூபாய் இருந்தது. பணத்தை யாரும் உரிமைகோராததால் பணத்தை கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் பால்சுதரிடம் ஒப்படைத்ததனர். அதன் பேரில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தேர்தல் செலவுக்காக பேருந்து மூலம் இந்த பணம் எடுத்து செல்லும் போது போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று பணத்துக்கு எவரும் உரிமை கோராமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.