Skip to main content

புதுவை அதிமுக பிரிப்பு... வெளியான அதிரடி அறிவிப்பு!

Published on 12/11/2020 | Edited on 13/11/2020

 

puducherry AIADMK separation ... AIADMK action announcement!

 

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு முக்கிய நிர்வாகச் செயல்பாடுகளை அ.தி.மு.க அறிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநில அ.தி.மு.க இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளராக அன்பழகனும், புதுச்சேரி மேற்கு மாநிலச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அதிமுகவின் சார்பில் ஊடகங்களைச் சந்திக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர், வைகைச்செல்வன், பரமசிவம் ஆகியோரும் ஊடகங்களைச் சந்திக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாக அ.தி.மு.க தெரிவித்துள்ளது.
 

அதேபோல், எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கு பதிலளிக்க அதிமுக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், செம்மலை, ரவிபெனார்ட், மருது அழகுராஜ் ஆகியோரும் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அதிமுக பிரச்சாரக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம் ஓ.எஸ்.மணியன், ஜே.சி.டி.பிரபாகரன், தம்பிதுரை, வைகைச்செல்வன், இளங்கோவன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.