Skip to main content

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து... பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

புதுச்சேரி கரையாம்புத்தூர் ஏரிக்கரை ஓரத்தில் குணசுந்தரி(45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

 

pudhucherry fire accident

 

 

தீபாவாளி பண்டிகையையொட்டி பல்வேறு பட்டாசுகள், வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  இங்கு பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி பிற்பகலில் திடீரென பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை வெடித்து சிதறியது. பயங்கர வெடி சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீயை அணைத்து, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஞானாம்பாள்(44),  தீபா(35) ஆகிய இருவரும் தீ விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் உரிமையாளர் குணசுந்தரி, ஊழியர்கள் கலாமணி(45), வைத்தீஸ்வரி(27) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் வைத்தீஸ்வரி அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன் தினம்  உரிமையாளர் குணசுந்தரி உயிரிழந்தார். இந்நிலையில் கலாமணியும் நேற்று உயிரிழந்துள்ளார்.புதுச்சேரியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்து குறித்து விசாரித்ததில், தீபாவளிக்கு அதிகமான பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்பதற்காக 300 ரூபாய் சம்பளத்தில் சில பெண்கள் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் சொர்ணாவூரை சேர்ந்த தீபா ஆலைக்கு அருகிலுள்ள ஏரிக்கரையில் திறந்தவெளியில் மரத்தடியில் வெடி மருந்து மற்றும் உப பொருட்களை சேர்த்து இடிக்கும் போது வெடிமருந்தின் அழுத்தம் காரணாமாக வெப்பம் ஏற்பட்டு வெடித்து சிதறியுள்ளது. அதில் தீபாவின் கை, கால்கள் வெடித்து சிதறியதுடன் அருகிலிருந்த தொழிற்சாலையிலும், குடோனிலும் தீப்பொறிகள் பட்டு அங்கிருந்த வெடி மருந்துகளும், பட்டாசுகளும் வெடித்து சிதறியுள்ளதாக தெரிகிறது. இதில் அங்கிருந்த 4 பெண்களும் தற்போது உயிரிழந்துள்ளனர்.

பல பட்டாசு தொழிற்சாலைகளில் விழா காலங்களில் புதிதாக ஆட்களை வைத்து வேலை வாங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய பயிற்சிகள், பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. வெடி மருந்துகளின் தன்மைகள் என்ன? எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற பயிற்சிகளும், அனுபவங்களும் இல்லாததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், உடலுறுப்புகளின் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே விழாக்காலங்களிலாவது அதிகாரிகள் பட்டாசு தொழிற்சாலைகளில் முன் கூட்டியே ஆய்வுகள் செய்து பாதுகாப்புத்தன்மை மற்றும் பணியாட்களின் திறன் குறித்து பரிசோதித்து வழிகாட்ட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.