Skip to main content

ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மீது எஸ்.பி. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

Public demand to SP Saisaran take action aandipatti All Women Police station

 

 

முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களை உருவாக்கிய பெருமை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியாகும். இப்படிப்பட்ட சட்டமன்ற தொகுதியான ஆண்டிபட்டி  நகரில்தான் ஜெயலலிதா உருவாக்கிய அனைத்து மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கக்கூடிய ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக புகார் அளிக்க வரும் பெண்களிடம் புகாரைப் பெற்றுக் கொண்டு உரிய விசாரணை நடத்தாமல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  மனு ரசீது வழங்காமல் இழுத்தடிப்புதுடன் மனு அளிப்பவர்களை தகாத வார்த்தைகள் பேசுவது அங்கு பணிபுரியும் பெண் காவலர்களின் அன்றாட செயலாக உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள், புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த எதிர் தரப்பிடம் பணத்தையும் வாங்கிக்கொண்டு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் விதமும் தொடர்கதையாகவும் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

 

இந்த கரோனா காலத்தில்  மக்கள் புகார் அளித்தால் மனு ரசீது அளிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று காவலர்கள் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை சார்பில் அறிக்கை விட்ட நிலையில், புகார் அளிப்பவர்களுக்கு மனு ரசீது கூட அளிக்க முடியாது  என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்கள் வெளிப்படையாகவே கூறிவருகிறார்கள். 

 

இதனால் பொதுமக்கள் புகார் கொடுக்கவே தயங்கி வருகின்றனர். இப்படி பெண்கள் அளிக்கும் புகாருக்கு பெண் காவலர்களே எதிராக செயல்படுவது அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. அதோடு இரு தரப்பினரும் ஒற்றுமையாக செல்ல விரும்பினாலும், பணம் வராவிட்டால் வழக்குப்பதிவு செய்வதும்  நடைமுறையாக உள்ளது. 

 

இதனால் இந்த  அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதைப்பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசியில் பேசினால்கூட அவர்களை ஒருமையில் திட்டுவது பெண் காவலர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களைக் கூட பெண் காவலர்கள் ஒருமையில்தான் பேசி வருகிறார்கள். இதுபோன்ற அடாவடி செயல்களுக்கு மாவட்ட கண் காணிப்பாளர் சாய் சரண் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. அதோடு எஸ்.பி சாய்சரண்னுக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்களின் அடாவடி நடவடிக்கை பற்றியும் பணம் வசூல் பற்றியும் புகார் மனுவும் அனுப்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐசியூவில் தாய்; பசியால் துடித்த குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Mother in ICU; A female guard nursed a starving child

 

மருத்துவமனையில் ஐசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணின் நான்கு குழந்தைகளும் வெளியில் தவித்துக் கொண்டிருந்தனர். பராமரிக்க யாரும் இல்லாததால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

உடனடியாக அங்கு வந்த எர்ணாகுளம் நகர காவல்துறையைச் சேர்ந்த பெண் போலீசார் குழந்தைகளை தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொண்டனர். அந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு மாத குழந்தையாகும். மற்ற மூன்று குழந்தைகளுக்கு பெண் போலீசார் உணவு வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால் நான்கு மாத குழந்தைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்பொழுது அதே காவலர் குழுவில் இருந்த ஆர்யா என்ற பெண் காவலர் அழுது கொண்டிருந்த நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதனை காவல் ஆய்வாளர் ஆனி என்பவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். பெண் காவலரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெண் காவலர் ஆர்யாவிற்கு ஒன்பது மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், பணிக்காக வந்த இடத்தில் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி பராமரித்த அவரது செயல் பல தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

 

 

Next Story

மதுபோதையில் பெண் காவலர் மீது தாக்குதல்; இளம்பெண் கைது

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

Drunk attack on female policeman; The girl was arrested

 

சென்னையில் மது போதையில் பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அண்மையில் சமூக வலைத்தளங்களில் மதுபோதையில் இளம்பெண் ஒருவர் பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் பெண் காவலரைத் தாக்கிய புகாரில் ரேகா என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

 

தாக்குதலுக்குள்ளான பெண் காவலர் முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் விநாயகபுரத்தைச் சேர்ந்த ரேகா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுபோதையில் கீழே விழுந்து கிடந்த ரேகாவை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மருத்துவரையும் ஆபாசமாகப் பேசி உள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு காவலர் முத்துலட்சுமியையும் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.