விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. இந்த சுற்றுச் சுவரில் மூன்று வாசல்கள் அமைக்கப்பட்டது. இதில் இரண்டு வாசல்கள் திறக்கப்பட்டுள்ளநிலையில் ஒரு வாயில் கேட்டு அதாவது ஆவின் டீக்கடை அருகிலுள்ள கேட் எப்போதும் மூடப்பட்டு தான் இருக்கிறது. இதனால் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Advertisment

gate

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இந்த வழியை பயன்படுத்தி சென்று கொண்டிருந்தனர். இதேபோல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கும் அதே வழியைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் அதை மாவட்ட நிர்வாகம் கடந்த 2 மாதமாக மூடியுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சியர் இந்த கேட்டை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.