/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court33222_5.jpg)
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ். மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டன. இந்த உத்தரவை எதிர்த்து, மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் "கரோனா காலமாக இருப்பதால் கல்விக் கட்டணம் செலுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி சார்பாக, டாக்டர் வெங்கடேஷ், மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,‘கல்லூரி கட்டணங்களை குறைக்க முடியாது. மாணவர்கள் தவணை முறையில் கல்விக் கட்டணங்களை செலுத்த வேண்டும். பிப்ரவரி மாதம் 8- ஆம் தேதி வரை இவர்கள் கட்டணம் செலுத்தும் காலத்தை நீடிக்கிறேன்"என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)