Prisoner escape!

கரூரை அடுத்த புலியூர் வடக்குப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொடியரசு. பல்வேறு திருட்டு வழக்குகள் கொண்ட கொடியரசு, அதே கிராமத்தில் பொதுமக்களிடம் இருந்து திருட முயன்றுள்ளார். அப்போது அதனைப் பார்த்த பொதுமக்கள் கொடியரசுவைப் பிடித்து அடி கொடுத்து பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

அந்தத் தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் நள்ளிரவில் கொடியரசை பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை கொடியரசுக்கு காவல்துறையினர் உணவு வாங்கி கொடுத்துள்ளனர். அதனைச் சாப்பிட்டு முடித்த கொடியரசு கை கழுவ வேண்டும் எனk கூறியுள்ளார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து ஒரு பெண் காவலருடன் கொடியரசு கை கழுவும் இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சென்ற கொடியரசு, அந்த பெண் காவலரை கீழே தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை பசுபதிபாளையம் முழுக்க தேடியுள்ளனர். அப்போது, கொடியரசு அமராவதி ஆற்றங்கரையில் முள் காட்டிற்குள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வைத்து காவல்துறையினர் அவரைகைது செய்து காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.