Skip to main content

உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Postponement of assistant professor exam

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதில் கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட நான்காயிரம் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கிறது என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கானதேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 02 2024 ஆனது கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி (14.03.2024) அன்று வெளியிடப்பட்டது.

இந்த நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு 04.08.2024 அன்று நடைபெறவிருந்த நிலையில் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்