அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு செல்லூர் ராஜூபதிலளித்ததிலிருந்து,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சொந்த தொகுதியான போடியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என்றும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ் என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.