Skip to main content

அஞ்சல் துறை தேர்வு ரத்து, தமிழில் தேர்வு எழுத அனுமதி!- திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை.

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் 1000 பணியாளர் இடங்களுக்கான தேர்வை தமிழில் எழுதக்கூடாது; இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் எழுத வேண்டும் என்று தேர்வுக்கு முதல் நாள் திடீரென்று மத்திய அரசு அறிவித்தது - கடும் அதிர்ச்சியை அளித்தது. தேர்வு எழுத இருந்தவர்கள் உள ரீதியாக உளைச்சலுக்கு ஆளானார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டோம். தேர்வை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்தி வைக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் (13.7.2019) வெளியிட்டும் இருந்தோம். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.,க்கள் கட்சிகளை மறந்து எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தோம். அதே போல, இன்று (16.7.2019) நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Postal exams canceled, permission to write exams in Tamil - says Dravidian President K Veeramani

 

 

 

நேற்று (15.7.2019) தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இதுகுறித்து தி.மு.க. பிரச்சினையைக் கிளப்பியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்காத நிலையில், தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். இந்த எதிர்ப்புகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசைப் பணிய வைத்ததன் விளைவாக இன்று (16.7.2019) பிற்பகல் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தமிழ் உள்பட மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். '37 பேர் நாடாளுமன்றத்திற்குள் சென்றால் என்ன சாதிக்க முடியும்?' என்று கேட்டவர்களுக்கு இது தான் சரியான பொருத்தமான பதிலாகும். மாநில உணர்வுகளையும், உரிமைகளையும், மொழிகளையும் மதிக்கும் போக்கு இந்தப் புள்ளியிலிருந்தாவது மத்திய அரசு தொடங்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் அழுத்தமான கோரிக்கை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Electric trains canceled in Chennai

சென்னையில் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சென்னையில் இருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் -  சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Next Story

2023 ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Announcement of 'Tagaisal Tamil Award' for the year 2023!

 

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது. 

 

அதன்படி, இந்த ஆண்டிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் (The Modern Rationalist) என்ற ஆங்கில இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணையதளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

 

"தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் கி. வீரமணிக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.