Skip to main content

அ.ம.மு.க கட்சியின் நிலைப்பாடு; விளக்கம் அளித்த டி.டி.வி. தினகரன்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

The position of the AMMK party; Explained by T.D.V. Dinakaran

 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அ.ம.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று  சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரோடு அ.ம.மு.க கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் காளிமுத்து, சந்தோஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

அப்போது பேசிய டி.டி.வி. தினகரன், “பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்.  அவர் கட்சியின் தலைவர். அதனால், இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார். தி.மு.க. வின் 2வது ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை. ஓ. பன்னீர்செல்வத்துடனான எனது சந்திப்பு நடந்ததே இனிவரும் காலங்களில் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான்.

 

அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலைச் சந்திப்போம். இனிவரும் காலங்களில்  அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்தேதான் பயணிப்போம். நான் என்.டி.ஏ. கூட்டணியில் இல்லை. அதனால், பா.ஜ.க மாநிலத் தலைவரின் நடைபயணத்திற்கு என்னை அழைக்காததைப் பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க கட்சியின் நிலைப்பாடு குறித்து வருகிற டிசம்பரில் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பக்ரீத் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Bakrit festival; Greetings leaders

பக்ரீத் பண்டிகை நாளை (17.06.2024) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், “பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இசுலாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம் நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இது போன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி, நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்தப் புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி. அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், அன்பு ஆகியவற்றைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும். 

Bakrit festival; Greetings leaders

இந்திய அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகளை பறிக்கிற வகையில் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டு வந்தது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாதுகாவலனாக காங்கிரஸ் பேரியக்கமும், தலைவர் ராகுல்காந்தி அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும்  இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். 

Bakrit festival; Greetings leaders

இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'தியானம் செய்வதால் என்ன பாதிப்பு வரப்போகிறது'-டி.டி.வி.தினகரன் கருத்து

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
 'What harm will come from meditating' - TTV Dinakaran's opinion

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடியவுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வர இருக்கிறார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று நாட்கள் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடப் போவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தமிழகம் வர இருக்கிறார்.

பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி தேர்தல் நடைமுறையை மீறும் செயல், எனவே ரத்து செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தும் நிலையில் திமுக சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி  மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 'What harm will come from meditating' - TTV Dinakaran's opinion

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் இங்கு இருப்பவர்கள் எல்லாம் சோமாலியா நாட்டில் உள்ளவர்களை போல மாறி நிற்பது தான் நடக்கும். இப்பொழுது மலிவான அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமர் வந்து அவர்பாட்டுக்கு தியானம் பண்ணுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது. நல்ல விஷயம் தான். இதை நான் கூட்டணிக்காக சொல்லவில்லை பொதுவாகவே சொல்கிறேன்'' என்றார்.