'Poor children's medical dream must be remembered' - Struggle to send a letters to chief minister

சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 5 நாட்களாக மற்ற அரசு மருத்துவக்கல்லூரியில் வசூலிக்கும்அதேஅளவிலான, கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

Advertisment

அவர்கள் ஒவ்வொரு நாளும் அறவழியில் 'டார்ச் லைட்' போராட்டம், கருப்புப்பட்டை அணிந்து போராட்டம் எனப் பல வடிவங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், திங்கள் கிழமை 5 -ஆம் நாளில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து மருத்துவக் கல்லூரி முன், மதிய உணவு இடைவெளியின் போது, அனைவரும் ஒன்று கூடி பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் 'தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து அனைத்து மருத்துவ மாணவ மாணவிகள் தமிழக முதல்வருக்குத் தனித்தனியாகக் கடிதம் எழுதி கையெழுத்திட்டு அனுப்பும் போராட்டத்தை நடத்தினார்கள். இதனால், கல்லூரி வாயிலில் 1 மணி நேரம் பரபரப்பாக இருந்தது. இதில் அனைத்து மாணவர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisment

'Poor children's medical dream must be remembered' - Struggle to send a letters to chief minister

இதனைத்தொடர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழக வாயிலில் உள்ளராஜேந்திரன் சிலை அருகேமருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்கலந்துகொண்டஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

'Poor children's medical dream must be remembered' - Struggle to send a letters to chief minister

இதனைத் தொடர்ந்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றதை வரவேற்கிறோம். அதேபோல் இந்தக் கல்லூரியில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் மருத்துவம் படிக்கிறார்கள். தற்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் இந்தக் கல்லூரியில் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம் தனியார் கல்லூரியை விட அதிகமாக உள்ளது. எனவே, தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடியாக உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள இந்தக் கல்லூரியை மருத்துவத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து, ஏழைப் பிள்ளைகளின் மருத்துவக் கனவைநினைவாக்கவேண்டும் என்றார்.

மேலும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், நீதிமன்ற உத்தரவுப்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறியது ஏற்புடையது அல்ல. அவர் கூறுவது போல் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்பதுதான் உண்மை என்றார். சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் பல்கலைக்கழகத்தை தாண்டி, தமிழக அளவில் விரிவுபடுத்தப்படும் எனவும்கூறினார்.