தமிழரின் திருநாளான தைப்பொங்கல் முன்னிட்டு வேலூர் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் தலைமையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சி கிராமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறை இசைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உறியடித்து சிலம்பம் சுற்றி அசத்தி சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேல் அரசம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஏபி.நந்தகுமார் கலந்துக்கொண்டபோது, விழாவில் ஒலிக்கப்பட்ட "ஸ்டாலின் தான் வராரு" என்ற பாடலுக்கு பள்ளி மாணவிகள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கண்டு ரசித்து வைப் ஆன எம்.எல்.ஏ நந்தகுமாரும் மாணவிகளோடு சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார். இதன்பின் 10 ஆம் வகுப்பில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சைக்கிள் இலவசமாக வழங்கினார். 450 மதிப்பெண்க்கு மேல் எடுக்கும் மாணவ மாணவியருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.