Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; திருநாவுக்கரசு உட்பட இருவருக்கு குண்டர் ரத்து!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த் கிருஷ்ணன், சதீஸ் உட்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

 Pollachi case;  two thugs canceled including Thirunavukarasu

 

தமிழகத்தையே அதிர்ச்சியில் மூழ்கவைத்த இந்த சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 7 பேரில் முக்கிய நபராக கருதப்படும் திருநாவுக்கரசின் தாய் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருத்தனர். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் பாலியல் வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டம் போடப்பட்டது தவறு என்றும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பு வாதாடியது.

 

 Pollachi case;  two thugs canceled including Thirunavukarasu

 

தொடர் குற்றங்களை செய்தவர்கள் என்ற அடிப்படையில்தான் குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலநூறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்ற புகாரை அடுத்து, சம்பந்தபட்ட பெண்களின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக்கூடாது என்ற அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டு 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனவே குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்ய பிறப்பித்த உத்தரவின் ஆவணங்கள் உரிய நேரத்தில் பெற்றோர்களிடம் வழங்கப்படவில்லை. அதேபோல் ஆவணங்களில் குறிப்பிட்ட பகுதிகள் தெளிவு தன்மை இல்லமால் உள்ளது எனக்கூறி திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெளதமியின் நில மோசடி வழக்கு; அழகப்பன் மீது குண்டாஸ்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Kundas on Alagappan for Gauthami's land fraud case

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துகளை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துகளை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, நடிகை கெளதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். 

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, கார் ஓட்டுநர் சதீஸ்குமார் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனையடுத்து, அழகப்பனை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்த நிலையில், கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் அழகப்பன் மற்றும் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

Next Story

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Electric trains canceled in Chennai

சென்னையில் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சென்னையில் இருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் -  சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.