Skip to main content

வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்...

Published on 29/09/2020 | Edited on 30/09/2020

 

politicians - farmers-struggle- against - Amendment Act

 

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள, மூன்று வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல கட்சி அரசியல் தலைவர்களும், விவசாயிகளும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், அரியலூரில் உள்ள தா.பழூரில், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சார்பில், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறித்தியும், அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் அனைத்துக் கட்சிகளின் சார்பில், தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


முன்னதாக சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் எம்.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் க.சர்க்கரைவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சர்க்கரைவர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.தங்கராசு, திராவிடர் கழகம் ஒன்றியச் செயலாளர் பி.வெங்கடாசலம், இந்திய ஜனநாயகக் கட்சி ஒன்றியச் செயலாளர் ஐ.ஆரோக்கியசாமி, தென்இந்திய நதிகள் இணைப்பு தேசிய விவசாயிகள் சங்க பிரதிநிதி தமிழ்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.


முடிவில் ஐ.ஜெ.கே மாவட்ட தலைவர் எஸ்.செல்வநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.தமிழ்செல்வன், த.நாகராசன், மாவட்ட அணித் துணை அமைப்பாளர்கள் கோவி.சீனிவாசன், இரா.சங்கர், சி.கண்ணதாசன், கே.ஆர்.கார்த்திக், பெ.ஆறுமுகம், தொ.மு.ச மாவட்ட கவுன்சில் துணை தலைவர் த.சம்பந்தம், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன், ஜெ.ஜெயசெந்தூரன், க.சேகர், த.குணசீலன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

 

அதேபோல், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் மத்திய மோடி அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக, திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கலந்துகொண்டார்.

 

politicians - farmers-struggle- against - Amendment Act

 

அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.மாசிலாமணி எம்.எல்.ஏ தலைமையில் மயிலம் தெற்கு வடக்கு ஒன்றியத்தின் சார்பில் விவசாய விரோத சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து அதற்கு துணை போகும் தமிழக அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மயிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் ஆர். சேதுநாதன், மயிலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் வ.மணிமாறன் மற்றும் மயிலம் வடக்கு தெற்கு நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் பதில்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
'Only one symbol if contesting in 2 constituencies'- Election Commission argument in MDMK case

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது. பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

சர்ச்சை பேச்சு; திமுக கூட்டணி வேட்பாளர் மாற்றம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Arrogant speech; DMK alliance candidate change

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட அணியமாகி வருகிறது.

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கட்சியின் சார்பாக சூரியமூர்த்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் சூரியமூர்த்தி பேசிய பேச்சுகள் தொடர்பான வீடியோக்கள் வைரலானது. எதிர்க்கட்சியினர் வேட்பாளரின் பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைத்திருந்தனர். இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக மாதேஸ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.