Skip to main content

காவலாளியை தாக்கியது தவறு - சிம்பு வருத்தம்

Published on 21/04/2018 | Edited on 21/04/2018
simbu


காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட கோரி போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்ட பிரபலங்களில், மன்சூர் அலிகான் தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை என்பதால் அதைப்பற்றி சிம்பு சென்னை காவல் ஆணையரிடம் விசாரித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது.


"காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திடக்கோரி போராட்டங்கள் நடத்திய நடிகர்களும், இயக்குனர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது மன்சூர் அலிகான், "அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். என்னையும் கைது செய்யுங்கள்", என்று கோவமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோவை நானும் பார்த்தேன்", 

"அவரும் சில வார்த்தைகள் தவறாக பேசியிருக்கிறார். நானும் பார்த்தேன். ஆனால் என்ன நோக்கத்தில் காவலர்கள் கைது செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதை முதலில் தெரிந்துகொள்ளதான் நான் இங்கு வந்துள்ளேன்", என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
 

"காவேரி மேலாண்மை போராட்டத்திற்காக அன்று சில பிரச்சனைகள் நடந்தது, அதை சிலர் வன்முறை என்றார்கள். ஆனால், அது வன்முறை அல்ல. அதேபோன்று காவலாளி மீது ஒரு இளைஞன் கைவைத்ததை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்".

"அந்த காவலாளி நினைத்திருந்தால் , அந்த பையனை அடித்திருக்கலாம் ஆனால் அவர் தன் கடமையை காப்பாற்ற வேண்டும் என்று அமைதியாக இருந்திருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்"

"காவலர்களை நான் மதிக்கிறேன். அதனால் தான் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு என்று சொல்வார்கள் என்று நம்புகிறேன். மன்சூர் அலிகானுக்கு கிட்னியில் ஆப்ரேஷன் நடந்திருக்கிறது. அதோடுதான் அவர் அன்று என்னையும் கைது செய்யுங்கள் என்று வந்திருக்கிறார். எல்லோரையும் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டதைபோல், செய்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், ஆனால் அவர் பையனை தொடர்புகொண்டபோதுதான் தெரிந்தது. அவர் இன்னும் விடுதலை செய்யபடவில்லை இல்லை" என்று.
 

இவ்வாறு அவர் ஆணையரை சந்திப்பதற்கு முன் தெரிவித்துவிட்டு சென்றார். பிறகு ஆணையரை பார்த்துவிட்டு திரும்பிய சிம்பு, மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில், " நான் இங்கு ஆணையரை வந்து சந்தித்ததற்கு காரணம், உடம்பு முடியாமல் தமிழன் என்கிற உணர்விற்காக வந்து கைது செய்யப்பட்டார் என்பதாலேயே. மனிதனை மனிதனாக மதியுங்கள்", என்றார்.
 

"எனக்கு அரசியல் தெரியாது", பின்னர் ஓட்டு மட்டும் போடுகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு. "விரல் வைத்தால் போதும்", என்றார். "என்னை நீங்கள் எல்லோரும் அரசியல்வாதியாகவே பார்க்கிறீர்கள். நான் அரசியல் வாதியல்ல, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் சிறப்பாக பதிலளிக்க முடியும். ஆனால், நான் அதற்காக இங்கு வரவில்லை" என்று முடித்துக்கொண்டார்.                         

சார்ந்த செய்திகள்

Next Story

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Date Notification for Cauvery Management Commission Meeting

கடந்த ஜனவரி 18 ஆம் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதத்தில் வினாடிக்கு ஆயிரத்து 182 கன அடி வீதம் 2.76 டிம்சி தண்ணீரும், பிப்ரவரி மாதத்திற்கு 998 கன அடி வீதம் மொத்தமாக 5.26 டிஎம்சி நீர் கார்நாடக அரசின் சார்பில் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

“மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்” - டி.கே.சிவக்குமார்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 D.K.Sivakumar says All arrangements are ready for construction of Mekeadatu Da

தமிழகத்திற்கும், கர்நாடாகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாக பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெற்று வருகிறது. நேற்று (14-12-23) மேல்சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பா.ஜ.க உறுப்பினர் என்.ரவிக்குமார், மேகதாது திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “நமது நீர், நமது உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும். 

நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்த திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது.

அதனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தால் காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனால், நமக்கும் நெருக்கடியான நிலை வராது. கர்நாடகாவில் இந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமலும், பயிர்களை பாதுகாக்கவும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் பின்பற்றினோம். மேகதாது திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கீழ்மட்டத்திலேயே பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, கர்நாடகா அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல கர்நாடகா அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.