/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cuddalore.jpg)
சென்னை புழல் சிறையில் சில தினங்களுக்கு முன்பு ஆயுள் கைதிகளுக்கு சொகுசு அறை மற்றும் செல்போன், பீடி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதை செல்பி போட்டோ மூலம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதன் எதிரொலியாக கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை எனவும் தீப்பெட்டி மட்டுமே சிக்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையால் மத்திய சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)