Police investigating passed away baby Kallakurichi after one month birth

கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயது செல்லதுரை. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 20 வயது பட்டதாரி பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. காதலின் நெருக்கம் அதிகமானதால் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பட்டதாரி பெண்ணின் வயிற்றில் கரு உருவாகியுள்ளது. வயிற்றில் கரு வளர வளர அந்தப் பெண் காதலர் செல்லதுரையிடம் எடுத்துக் கூறி தன்னை உடனடியாகத்திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய செல்லதுரை மறுத்துள்ளார்.

Advertisment

இதனையடுத்துஅந்தப் பெண், காதலர் செல்லதுரையின் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார் காதல் மூலம் பட்டதாரி பெண் வயிற்றில் குழந்தை வளர்வதை உறுதி செய்தனர்.இது குறித்து செல்லதுரையிடம் அவர்கள் எடுத்துக் கூறி காதலியைத்திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதையும் செல்லதுரை மறுத்துவிட்ட நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில்அந்தப் பெண் வயிற்றிலிருந்த குழந்தை பிறந்து திடீரென மரணமடைந்துள்ளது. இது குறித்து அந்தகிராம நிர்வாக அலுவலர் அலமு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பிறந்த குழந்தை இறந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் மூலம் கல்யாணம் ஆகாமலே குழந்தை பிறந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.