
அம்பத்தூரில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த நிலையில் அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவலர் சரவணகுமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். தற்பொழுது தற்கொலை செய்துகொண்ட சரவணகுமாரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ், காவல் உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட போலீசார் காவலர் சரவணகுமாரின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)