Skip to main content

"கானா பாட்டிலேயே போலீசுக்கு கொலை மிரட்டல்... கம்பி எண்ணும் ரவுடியின் கூட்டாளிகள்.!"

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

 

கடந்த ஆண்டு ஜூலை 2-ந்தேதி இரவு சென்னை ராயப்பேட்டையில் பி.எம். தர்கா அருகே ஒரு கும்பல் குடிபோதையில் தகராறு செய்தது. அப்போது, ரோந்து சென்ற தலைமைக் காவலர் ராஜவேல், அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். மித மிஞ்சிய போதையில் இருந்த அந்த கும்பல், காவலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. 

t

 

இதையடுத்து கூடுதல் படையோடு சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ராஜவேலுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. போலீஸ்காரரை தாக்கிய ரவுடிகள்  ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மெயின் ரவுடியான ஆனந்தன் தலைமறைவாகிவிட, அவனை ஜூலை 4-ந்தேதி என்கவுன்டரில் போட்டு பழி தீர்த்துக் கொண்டது காவல்துறை. ஆனந்தனை பிடிக்க முயன்றபோது போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால், என்கவுன்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. அப்போது, என்கவுன்டர் நடத்திய உதவி ஆணையர், இப்போதும் அதே சரகத்தில் தான் பணியாற்றி வருகிறார். 

 

இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி ஆனந்தனின் நினைவுநாளையொட்டி, அவனது நண்பர்கள் 'டிக்டாக்' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மயிலாப்பூர் கைலாசபுரம் இடுகாட்டின் பின்னணியில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் " வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என கானா பாடல் பாடி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

இதையடுத்து, வீடியோவில் இடம்பெற்றுள்ள சுரேஷ்குமார், விஜய், கார்த்திக், பிரசாத், கானா பாடகர் மணிகண்டன், சமீர் பாட்ஷா என 6 பேரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளனர். 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

டிக் டாக்கில் தமிழ்தாய் வாழ்த்துக்கு நடனம்... இளைஞருக்கு குவியும் பாராட்டு!

Published on 28/01/2020 | Edited on 29/01/2020

டிக் டாக் வீடியோவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு கலை நயத்துடன் நடனம் ஆடியவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மொழிகளுக்கு ஒரு வாழ்த்து பாடல் என்பது கட்டாயம் இருக்கும். அதை போல தமிழ் மொழிக்கு தமிழ்தாய் வாழத்தாக நீரருங் கடலுடுத்த நிலமடைந்தை என ஆரம்பிக்கும் பாடம் வாழ்த்து பாடலாக இருக்கிறது. இந்த வாழத்துப்பாடல் பள்ளிகளிலும், மற்ற அரசு விழாக்களிலும் பாடப்படும்.



மனோன்மனியம் பெ. சுந்தரனார் எழுதிய இந்த பாடலுக்கு, தற்போது நடன ஆசிரியர் ஒருவர் கலைநயத்துடன் நடனம் ஆடியுள்ளார். அவரின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப்போலவே பலரும் முயற்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
 

 

Next Story

டிக் டாக் தோழியுடன் கணவர் ஓட்டம்: கண்ணீரோடு எஸ்பியிடம் மனைவி புகார்...!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 2014 திருமணம் நடந்துள்ளது. இதன்மூலம் மூன்று வயதில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த கைக்குழந்தையோடு கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ் அவர்களிடம் சுகன்யா தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

 

 

tictok

 



இந்த புகார் குறித்து சுகன்யா கூறுகையில், "2014 எங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு என் கணவர் வீட்டில் மாமியார் நாத்தனார் ஆகியோர் என்னை கொடுமை படுத்தினார்கள். அதையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினேன். இந்த நிலையில் எனது கணவர் ராஜசேகர் டிக்டாக் செயலி மூலம் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பேசியும், நடித்தும்  அதை பதிவு செய்து செல்போன் மூலம் வெளியிட்டு வந்தார்.

 

tictok



இதன்மூலம் பல்வேறு பெண்களுடன் என் கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை உருவானது. இவை பற்றி சமீபத்தில் கடம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் எங்களை அழைத்து விசாரணை செய்து என் கணவரை கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு என் கணவர் திடீரென்று காணாமல் போனார். கடந்த மூன்று மாதங்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை. விசாரித்தபோது புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் டிக்டாக் செயலி மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் என்னையும் என் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு அந்த பெண்ணுடன் ஓடிவிட்டார்.

 



இதுதொடர்பாக அறந்தாங்கி காவல் நிலைய போலீசார் என்னை தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது என் கணவர் ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோவையும் போலீசார் எனக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். அதன் மூலம் என் கணவர் டிக் டாக் மூலம் அந்தப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இப்போது நானும் என் குழந்தையும் நிர்க்கதியான நிலையில் உள்ளோம். எனவே மாவட்ட காவல்துறை அதிகாரி அவர்கள் என் கணவரை அந்த இளம்பெண்ணிடம் இருந்து மீட்டு என்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளேன்" என தெரிவித்தார். டிக் டாக் செயலி ஒரு குடும்பத்தையே சீரழிக்கும் நிலையை உருவாக்கி உள்ளது.