பெண்கள் தொடர்பாக மனுநீதியில் கூறிய சில கருத்துகளை, சமூக ஊடகம் வாயிலாக, வி.சி.க கட்சித் தலைவர் திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு இந்து அமைப்புக்கள், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமாவளவனின் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து குஷ்பு தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே இந்தப் போராட்டத்திற்கு சிதம்பரம் காவல்துறையினர் நேற்று இரவு அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த சிதம்பரம் நோக்கி காரில் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து ட்விட் செய்துள்ளார்.
திருமா வளவன் தீட்டிய அரிவாள்
தென்னவர் சுழற்றியதே - அவன்
அரிமா போலே ஆர்த்த கருத்தும்
அரிவையர் வாழ்வதற்கே – அதை
அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது
அரசியல் செய்வதற்கே – நாம்
நெறியின் வழியே நீண்டு நடப்பது
நீதி நிலைப்பதற்கே@thirumaofficial
— வைரமுத்து (@Vairamuthu) October 27, 2020