pmk Petition Trichy Government Hospital dean

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டி பா.ம.க.வினர் மனு கொடுத்துள்ளனர்.

Advertisment

திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேருவைச் சந்தித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் உமாநாத் தலைமையில், மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கச் செயலாளர் பிரபு முன்னிலையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Advertisment

அந்த மனுவில், “திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் சார்பில் சேவை செய்யும் நோக்கில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறு செய்யக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜா, மதன், இஸ்மாயில், முருகேசன், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.