Skip to main content

பாமக எம்.எல்.ஏ. குடும்பத்தினர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

pmk MLA High Court orders the family to appear for police interrogation
பாமக எம்.எல்.ஏ. சதாசிவம்

 

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமகவைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி பேபி. இவர்களுக்கு சங்கர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு சங்கருக்கும் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் எம்.எல்.ஏ சதாசிவம் மகன் சங்கர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது மனோலியாவுக்குத் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து அவர் தனது கணவரிடம் கேட்கும் போது சரிவரப் பதிலளிக்காமல் சண்டை போட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இது ஒரு புறமிருக்க, சங்கர் மனோலியாவிடம் நகை பணம் கேட்டு அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். இதுகுறித்து மாமனார் சதாசிவத்திடம் தெரிவித்த போது, அவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த மனோலியா, தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து மனோலியா, சதாசிவம் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் சதாசிவம், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், வழக்கின் விசாரணைக்கு சங்கர் நேரில் ஆஜராகாமல் இழுத்தடிப்பதாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி  வழக்கு தொடர்பாகக் காவல்நிலையத்தில் ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறி சம்மனைப் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மகன் சங்கர், மனைவி பேபி, மகள் ஆகியோர் முன் ஜாமீன்  மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில்  இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தவறான குற்றச்சாட்டுகளுடன் புகார் தரப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய அன்புமணி ராமதாஸ்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரமணி தந்தை பெரியார் நகர் பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மாவட்டச் செயலாளர் ஜி.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

'பாதிப்பை தடுக்க அரசு தவறிவிட்டது'- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

mm

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயல் பாதிப்பை தடுக்க அரசு தவறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புயல் அறிவிப்பு முன்பே வெளியாகியும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதிலிருந்து அரசு தவறிவிட்டது. கடந்த காலங்களில் இதைவிட மழை பெய்தாலும் அரசு திட்டமிட்டு இருந்தால் பாதிப்பை  குறைத்திருக்கலாம். மழைநீர் வடிகால் பணிகளுக்கு 4,000 கோடி செலவிட்டும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடும்பங்கள் பொருளாதார, வாழ்வாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். மூன்று நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையில், குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.