Skip to main content

அ.திமுகவிற்கு அடித்தளம் போட்ட திண்டுக்கல்  தொகுதி பா.ம.க.வுக்கு?

Published on 12/03/2019 | Edited on 12/03/2019


    திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து புதிதாக அ.தி.மு.க.வை தொடங்கியது 1973ல் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவரை எம்.ஜி.ஆர். போட்டியிட வைத்து அமோக வெற்றி பெற வைத்தார். அந்த அளவுக்கு அ.தி.மு.க.விற்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததே திண்டுக்கல் தொகுதி தான். இந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்த மாயத்தேவர் தான் சுயேட்சை சின்னமாக இரட்டை இலையை தேர்வு செய்தார்.

 

m

தன்பின் தான் இந்த இரட்டை இலை அ.தி.மு.க.வின் அங்கீகார சின்னமாக மாறி பெரும்பாலான மக்கள் மனதிலும் இன்றுவரை இரட்டை இலை நிலைத்து நிற்கிறது. அதுபோல் 1952ல் பாராளுமன்றம் தொடங்கி இன்றுவரை 17 பேர் போட்டியிட்டு இருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவர் இரண்டு முறையும், நடராஜன் ஒருமுறையும்,தற்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் நான்குமுறையும் வெற்றி பெற்று இருக்கிறார். அதுபோல் தற்போது அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி.யாக உதயக்குமாரும் இருக்கிறார். 

 

s


இப்படி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி உருவாகியதின் மூலம் 17 முறை அரசியல் கட்சிகள் போட்டி போட்டதில் எட்டு முறை அ.தி.மு.க. இத்தொகுதியை தக்க வைத்துள்ளது. அதுபோல் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருக்கும் வரை தொடர்ந்து இந்த திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமலேயே அ.தி.மு.க.வே போட்டி போட்டு இருக்கிறது. அப்படி இரக்கும் போது தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஜெ. மறைவுக்கு பிறகு முதன் முதலாக நடக்கிறது. அதனால் கட்சியும், ஆட்சியும் தற்போது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். கையில் இருப்பதால் இருவரும் சேர்ந்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அ.தி.மு.க. உடன் பா.ம.க., பி.ஜேபி, தே.மு.தி.க. உட்பட சில கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். 

 

இப்படி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கி உள்ளதாகவும் தெரிகிறது. அதுபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளரான கவிஞர் திலகபாமா தான் பா.ம.க. வேட்பாளராக அறிவிக்க போகிறார்கள் என்ற பேச்சும் பரவலாக இருந்து வருகிறது. அந்த திலகபாமாவின் சொந்தஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி. அதிலயும் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டபிள்யுபிஏ. சௌந்தரபாண்டியாரின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

t

 

ஏற்கனவே திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை பா.ம.க. சார்பில் பால்பாஸ்கர் போட்டியிட்டார். அதுபோல் பா.ம.க. சார்பில் இந்த முறை பாராளுமன்ற தேர்தலுக்கு கவிஞர் திலகபாமா களமிறங்க போகிறார் என்று பா.ம.க.வினரோ உற்சாகமாக இருந்து வருகிறார்கள். 


இது சம்மந்தமாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளரான கவிஞர் திலகபாமாவிடம் கேட்டபோது... அ.தி.மு.க. கூட்டணியுடன் ஐயா தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறாரே தவிர இன்னும் தொகுதிகள் முடிவாகவில்லை. அப்படி ஏதும் தொகுதி முடிவாகி வேட்பாளர் என்று அறிவித்தால் முதன் முதலில் திண்டுக்கல் வந்து பத்திரிக்கையாளர்களாகிய உங்களைத்தான் முதன் முதலில் சந்தித்து என்று கூறினார்!
 

சார்ந்த செய்திகள்