
கிஷான் திட்ட முறைகேடு தொடர்பான விசாரணை மாவட்டந்தோறும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். மேலும் முறைகேடாக பயனடைந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் சுமார் 20.25 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கிஷான் திட்டத்தில் மோசடி செய்த 19 ஆயிரம் பேரிடம் இருந்து இதுவரை ரூபாய் 7.25 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பயனடைந்த 42 ஆயிரம் பேர் கண்டறியப்பட்ட நிலையில், 19 ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் இதுவரை ரூபாய் 13 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடாக பயனடைந்த 2 லட்சம் பேர் கண்டறியப்பட்ட நிலையில், 43 ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிஷான் திட்டமுறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மைதுறை இணை இயக்குனர் கென்னடி ஜெயக்குமார், நாமக்கல் மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.