Skip to main content

பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை கொடூரமாக கொன்ற பள்ளி மாணவன்!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Plus 2 student incident special girl in Salem

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள குறுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பெருமாயி (55). வாய்பேச  இயலாத மாற்றுத்திறனாளி. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்குத் திருமணமாகி வெளியூரில்  குடும்பத்துடன் வசிக்கிறார். இதனால் பெருமாயி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

பிப். 12ம் தேதி காலை பெருமாயி, வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். அருகில் ரத்தம் தோய்ந்த நிலையில் ஒரு கல் கிடந்தது. மர்ம நபர்கள் அவருடைய தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்தது. தகவல் அறிந்த பூலாம்பட்டி காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் சந்திரலேகா மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக்  கைப்பற்றி உடற்கூராய்வுக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பெருமாயி வீட்டிற்கு வந்து சென்ற மர்ம நபர்கள் குறித்தும், அவருடைய உறவினர்கள், அக்கம்பத்தினர் ஆகியோரிடமும் விசாரித்தனர். இதில் கிடைத்த தகவலின்படி, சம்பவத்தன்று குறுக்கப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பெருமாயி வீட்டில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் சிறுவனைப் பிடித்து விசாரித்தனர். சிறுவன், பெருமாயியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.     

இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்டோம், “கொலை நடந்த நாளன்று பெருமாயி வீட்டிற்கு 17 வயது சிறுவன் சென்றுள்ளார். தாகத்திற்குத் தண்ணீர் வாங்கிக் குடித்துள்ளார். பெருமாயிக்கு  ஆதரவாக யாரும் வீட்டில் இல்லாதது மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த சிறுவன், அவரை திருமணத்தை மீறிய உறவிற்கு அழைத்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாயி அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். மேலும், தப்பாக நடக்க முயற்சித்தால் ஊரைக்கூட்டிச்  சொல்லி விடுவேன் என்று சைகையால் சொல்லி இருக்கிறார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சிறுவன் பெருமாயி எங்கே கத்தி கூச்சல் போட்டுவிடுவாரோ என்று பதற்றம் அடைந்து இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று  மிரட்டியுள்ளார். அப்போது  இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுவன் பெருமாயியை கீழே  தள்ளி, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டார். அந்தச் சிறுவன் அதே ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி    வந்துள்ளார்” என்கிறார்கள் காவல்துறையினர்.     

சிறுவனை கைது செய்த செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். வீட்டில்  தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அடித்துக் கொலை செய்த சம்பவம் இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு; உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 husband lost their life in grief over the passed away of his wife

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வசிக்கும் ஜெனிஷ்(25) அப்பகுதியைச் சேர்ந்த ஜெனிஷா(20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஜெனிஷ் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். ஜெனிஷா திருநந்திக்கரையில் உள்ள ஒரு தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜெனிஷ் மற்றும் ஜெனிஷா இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே ஜெனிஷுக்கு குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. இதனை மனைவி ஜெனிஷா கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த ஜெனிஷா கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் விஷம் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கடந்த சில நாட்களாக ஜெனிஷ் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தினமும் அதிகளவில் மது அருந்தி உள்ளார்.

இந்த நிலையில் ஜெனிஷ் கடந்த 7 ஆம் தேதி தனது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்ரி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பறிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஜெனிஷ் உயிரிழந்தது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த துக்கத்தில், உயிரை மாய்த்துக் கொண்ட கணவனின் செயல் குலசேகரப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.