Skip to main content

இயற்கையை மீட்டெடுக்க களமிறங்கிய புதுமணப் பெண்கள்!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020
Newlyweds

 

 

நவீன காலத்தில் திருமணம் நடந்தவுடன் பல சம்பிரதாய சடங்குகளை முன்னெடுக்கும் காலகட்டத்தில் புதுமணப் பெண்களின் இயற்கை மீது கொண்டிருக்கும் பற்று அனைவரையும் வியக்க வைக்கிறது. அண்மையில் நடந்த திருமணங்களே இதற்கு ஆவணங்களாக கண் முன்னே நிற்கிறது. அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டி அருகில் உள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தில் புனிதா மணிகண்டன் செட்டித்திருக்கோணம் சிவன் கோயில் அருகில் உள்ள ஏரிக்கரையிலும், விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் இசையரசி பாலமுருகன் தம்பதியர் கோவிந்தபுத்தூர் சிவன் கோயில் வளாகத்திலும், நாகமங்கலம் கிராமத்தில் விஏஓ வாக பணியாற்றும் திருநாவுக்கரசு தனது மனைவி பிரன்னிதா உடன்  கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் வண்ணான் குளம் நீர்நிலையிலும் மரக்கன்றுகளை நட்டனர். திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்துடன் வந்து மரக்கன்றுகளை நட்டது மிகப்பெரிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது.

 

இதுகுறித்து அரியலூர் மாவட்டத்தின் முன்னோடி இயற்கை ஆர்வலர் தங்க சண்முக சுந்தரம் கூறும்போது, “சமீபகாலமாக இயற்கையை மீட்டெடுப்பதில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. விதைகளை பெண்கள் கையில் கொடுத்து விதைக்க சொல்வது மரபு. இயல்பாகவே கருவை சுமப்பவர்கள் பெண்கள் என்பதனாலோ என்னவோ, பெண்களிடம் விதைகளை பராமரிக்கும் பொறுப்பினை வழங்கி உள்ளனர் நம் முன்னோர்கள். பெண்கள் மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பினை எடுத்துக் கொண்டால் விரைவில் அரியலூர் மாவட்டம் பசுமையாக மாறிவிடும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரமலான் திருநாள்; மரக்கன்றுகளை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

pudukkottai thanjavur ramzan celebration tree plant supply alumni school students

 

ரமலான் பண்டிகை இன்று (22.04.2023) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் இரவு முதல் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

தமிழ்நாட்டில் 'எம்மதமும் எம்மதமே' என்ற இலக்கணத்தோடு தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பண்டிகைகளுக்கு இஸ்லாமியர்களும் இஸ்லாமியர்கள் பண்டிகைகளுக்கு இந்து, கிறிஸ்தவர்களும் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வதோடு விருந்து உபசாரங்களிலும் பங்கேற்று சகோதரத்துவத்தை நிலைநாட்டி வருகின்றனர்.

 

இதே போல தான் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட எல்லை கிராமங்களில் பேராவூரணி, ஆவணம், நெடுவாசல் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த முன்னாள் பள்ளி மாணவர்கள் தற்போது வெவ்வேறு பணிகளில் இருந்தாலும் கூட ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பள்ளி விழாக்களில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.

 

pudukkottai thanjavur ramzan celebration tree plant supply alumni school students

 

அதே போல இன்று இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பேராவூரணி, ஆவணம் பள்ளிவாசல்களில் தொழுகை நேரத்திற்கு முன்பே சென்ற முன்னாள் மாணவர்கள் சிறப்புத் தொழுகை முடிந்து வெளியே வரும் போது ரமலான் வாழ்த்துகள் கூறி மரக்கன்றுகளை பரிசாக வழங்கி ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். இந்த நாளில் கொடுக்கும் ஒவ்வொரு மரக்கன்றுகளையும் ரமலான் நாளை நினைத்து வளர்த்து விடுவார்கள்.a இன்று வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளில் எப்படியும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை வளர்த்து வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் பழமரக்கன்றுகளை அதிகமாக வழங்கி வருகிறோம் என்றனர் முன்னாள் மாணவர்கள். 

 

 

Next Story

மு.க. ஸ்டாலின் பதவியேற்பு.... மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

people celebrate stalin swearing ceremony by offering sapling and sweets

 

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற திமுக, அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இன்று (07.05.2021) பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். 

 

people celebrate stalin swearing ceremony by offering sapling and sweets

 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அதே தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் வெற்றியைப் பறிகொடுத்த புல்லட் ராமச்சந்திரன் தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சியினர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதேபோல மாவட்டம் முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகர் தொடங்கி அனைத்து கிராமங்களில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் இருந்து ரகுபதி, மெய்யநாதன் என இரு அமைச்சர்கள் பதவியேற்றதால் கூடுதல் உற்சாகமாக கொண்டாடினர்.

 

people celebrate stalin swearing ceremony by offering sapling and sweets

 

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் திமுக பொன். லோகநாதன், நிர்வாகிகள் ஆகியோர் கட்சிக் கொடி ஏற்றி வெற்றி முழக்கமிட்டனர். தொடர்ந்து சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன் முன்னிலையில் இனிப்புகளுடன் மரக்கன்றுகளும் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நாளில் வழங்கப்படும் மரக்கன்றுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பல வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்றனர். இப்படி கீரமங்கலம், செரியலூர், வடகாடு, மாங்காடு, அணவயல் உட்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.