/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pisasu333.jpg)
பிரபல இயக்குனர் மிஷ்கின்இயக்கத்தில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைப்பில் பிசாசு 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
உல்லாசம், டும் டும் டும் உள்ளிட்ட படங்களில் மிகச் சிறந்தப் பாடலைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிசாசு 2 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பாலா தயாரிப்பில் வெளியான 'பிசாசு' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிசாசு 2 பட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)