Skip to main content

பத்திரப்பதிவுக்கு பான் எண் அவசியம்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
sub

 

பத்து லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கு பான் எண் அளித்தால் மட்டுமே பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.   10 லட்சத்திற்கு மேல் அசையா சொத்துக்களை வாங்குபவர், விற்பவர் பான் எண்ணை அளிக்க வேண்டும் என்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.  

 

மேலும், ஆவணப்பதிவுன் போது விற்பவன், வாங்குபவர் அளித்த பான் எண் போலியானவை என தெரியவந்தால் பத்திரம் பதியக்கூடாது  என்றும் பதிவுத்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Chennai Airport has five levels of security

 

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை விமான நிலையப் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் இருபதாம் தேதி வரை ஐந்தடுக்கு பாதுகாப்பு சென்னை விமான நிலையத்தில் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நாட்டின் முக்கிய இடங்களில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கியமான விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் வாயில் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.

 

அதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் கொண்டுவரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்கள் மட்டுமல்லாது தற்போது கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டு விமான நிலையம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஐந்தடுக்கு பாதுகாப்பு முறை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனவும், குறிப்பாக ஆகஸ்ட் 13, 14, 15, ஆகிய நாட்களில் உச்சக்கட்ட பாதுகாப்பாக, ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏழடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Next Story

பிரதமர் வருகை... ட்ரோன்கள் பறக்க தடை!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

 PM's visit ... Drones banned from flying!

 

நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்.  நாளை பிற்பகல் 03.55 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் மாலை 05.10 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கு அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்க இருக்கின்றனர்.

 

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைகிறார். பின்னர், சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெற இருக்கும் பெரியமேடு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 05.45 மணிக்கு வருகிறார். பயணத்தின் இடையில் பா.ஜ.க.வினர் சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 05.45 மணிக்கு வரும் பிரதமர், இரவு 07.00 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மீண்டும் அங்கிருந்து இரவு 07.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 07.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடைகிறார். பின்னர், அங்கிருந்து இரவு 07.40 மணிக்கு இந்திய விமானப் படை ஐ.ஏ.எப். பிபிஜே விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு இரவு 10.25 மணிக்கு செல்கிறார்.

 

பிரதமர் வருகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகை காரணமாக ட்ரோன் உள்ளிட்ட வான்வழி வாகனங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 22,000 போலீசாரை கொண்ட ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.