/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a26_1.jpg)
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சுற்றுப் பயணம் தொடங்கிய இடத்திலேயே பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் 5 பேரிடம் மர்மநபர் ஒருவர் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வந்த சசிகலாவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடியதோடு செய்தி நிறுவனங்களின் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் மற்றும் மக்களிடமிருந்து மர்ம நபரால் பணம், நகை, பர்ஸ் ஆகியவை பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாக்கெட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தொடர்ந்து போலீசார்தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)