Skip to main content

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்...!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

physically challenged people involved in the struggle

 

தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் செய்தனர். மேலும் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

 

இதற்காக புதன்கிழமை (24.02.2021) காலை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாலதி தலைமையில் திரண்ட மாற்றுத்திறனாளிகள், அருகில் இருக்கும் மாநிலங்களில் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்கிற அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கருவாடை வாரி இறைத்த அதிகாரி; மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

The tragedy of a disabled woman in sayalkudi

 

ராமநாதபுரம் சாயல்குடி அருகே கருவாட்டு கடை வைத்திருந்த பெண் மாற்றுத்திறனாளியை அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசி, விற்பனைக்கு வைத்திருந்த கருவாடுகளை தூக்கி சாலையில் வீசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்து வந்த நிலையில் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். வார சந்தையில் ஒரு சில கடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சியின் செயல் அலுவலர் சேகர் என்பவர் ஆய்வு செய்தார். அப்பொழுது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அந்த பகுதியில் கருவாட்டு கடை வைத்திருந்தார். கடையை அகற்றும் படி சொன்ன அலுவலர் சேகர், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து மாற்றுத்திறனாளி பெண்ணை தரக்குறைவாக திட்டியதோடு, விற்க வைக்கப்பட்டிருந்த கருவாடுகளை தூக்கி சாலையில் வீசினார்.

 

இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தட்டிக் கேட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தரை குறைவாக நடந்துகொண்ட அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

“முதல்வர் ஐயா... என் தங்கச்சி உயிரைக் காப்பாத்துங்க” - மாற்றுத்திறனாளி தங்கைக்காக கண்ணீர் கோரிக்கை வைக்கும் சகோதரி

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

"Sir... Save my younger sister's life" - Sister pleads tearfully for disabled younger sister



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள்கள் சுகுணா, சுகந்தி. இருவரும் மாற்றுத்திறனாளிகள். சுமார் 10 ஆண்டுகளாக வெளியுலகம் காணாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தாலும் சுகுணாவுக்கு புத்தக வாசிப்பும், கவிதை எழுதி வாசிப்பதும் வழக்கம். கவிதை எழுதும் தனித்திறமையால் 100க்கும் மேற்பட்ட பாராட்டுச் சான்று பெற்றுள்ளார் கவிஞர் சுகுணா பன்னீர்செல்வம். அதேபோல அவரது தங்கையான சுகந்தி பன்னீர்செல்வமும் ஒரு மாற்றுத்திறனாளிதான் என்றாலும் காகிதங்களில் ஓவியங்கள் வரைந்து சாதித்து வருகிறார். இருவருமே மாற்றுத்திறனாளிகள் அல்ல மாற்றத்திற்கான திறனாளிகள் என்பதைப் படுத்த படுக்கையில் இருந்தே சாதித்து வருகின்றனர்.

 

இவர்களுக்காகப் பெற்றோர் படும் சிரமம் சொல்லில் அடங்காது. இப்படியான சாதனையாளர்களில் ஒருவரான ஓவியர் சுகந்தி பன்னீர்செல்வத்திற்கு சளி தொல்லை ஏற்பட்டு கடந்த 8 நாட்களாக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கவிஞர் சுகுணா பன்னீர்செல்வம், 'என் தங்கை சுகந்தி உயிரைக் காப்பாற்றுங்கள் முதல்வர் ஐயா' என்று காணொளி மூலமாக முதலமைச்சருக்கு கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளார்.

 

அந்த காணொளியில் அவர் கூறியிருப்பதாவது, 'எனது தங்கை சுகந்திக்கு நுரையீரலில் சளி அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு என் தங்கை வேண்டும். நாங்கள் நலமாக இருந்து நல்லது செய்யணும். அதனால் என் தங்கை உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள்'' என்று கண்ணீரோடு இரு கரம் கூப்பி கோரிக்கை வைத்துள்ளார்.

 

மேலும் நம்மிடம் கூறும்போது, 'என் தங்கை உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரும், அமைச்சரும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல எங்களை வெளியே அழைத்து செல்லும்போது பெற்றோர் எங்களை தூக்கிக்கொண்டுதான் போறாங்க. அதனால ஒரு பேட்டரி வீல்சேர் வாங்கிக் கொடுத்தால் கொஞ்சம் சிரமம் குறையும்'' என்றார்.