Petrol diesel prices go up in Tamil Nadu

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 45 நாட்களாக பெட்ரோல் ,டீசலின் விலை மற்றும் அதன் பயன்பாடு குறைந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்புகூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு 3.25 காசும், டீசல் இரண்டு ரூபாய் 2.50 காசும்உயர்கின்றன. இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தின் வருவாய்க்கான டாஸ்மாக் முற்றிலும் மூடப்பட்ட நிலையில், தொழில் வருவாயும் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.