பெட்ரோல் குண்டு கலாச்சாரம் இருக்கக் கூடாது என்பதும், இத்தகைய பெட்ரோல் குண்டு கலாச்சாரக்கள் தமிழ் கலாச்சாரங்கள் இல்லை என்பதும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூற்யுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 118ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சி.பா.ஆதித்தனார் செய்த தமிழ் தொண்டு யாராலும் மறக்க முடியாதது. எந்த மாநிலமாக இருந்தாலும் பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பது தான் என் கருத்து.
அனைவருமே அமைதியாக சகோதரத்துவத்துடன் இருக்க வெண்டும். இதை போல ஒரு நிகழ்வு நடக்கும் போது அது பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இத்தகைய கலாச்சாரம் இருக்கக் கூடாது என்பதும், இத்தகைய பெட்ரோல் குண்டு கலாச்சாரக்கள் தமிழ் கலாச்சாரங்கள் இல்லை என்பதும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.