PETROL BUNK INCIDENT POLICE INVESTIGATION

Advertisment

பெட்ரோல் பங்க் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் பழனி என்பவரைக் கத்தியால் தாக்கி, வாகனத்தைச் சேதப்படுத்திய கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பழனிக்கும், கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பழனியைக் கத்தியால் தாக்கிய கும்பல், அவரது வாகனத்தைச் சேதப்படுத்தியுள்ளனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், பழனி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் கும்பலை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், கும்பலைச் சேர்ந்த ஒருவரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், மற்றவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.