Skip to main content

ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி சசிகலாவை வரவேற்க அனுமதி கேட்டு மனு!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

 Petition seeking permission to welcome Sasikala by sprinkling flowers by helicopter!

 

தமிழக முதல்வராக இருந்தபோது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகார் மற்றும் வழக்கில் கர்நாடகா நீதிமன்றம், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதேபோல் இளவரசிக்கும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வந்தபோது ஜெயலலிதா மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்துபோனார்.

 

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்கள். கடந்த வாரம் சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையானார். வரும் 5ஆம் தேதி இளவரசி விடுதலையாகிறார். பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூருவில் இருந்து தமிழகம் வருகிறார்கள்.

 

தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகளை டி.டி.வி.தினகரன் செய்துவருகிறார். பெங்களூருவில் இருந்து நேராக சென்னை செல்கிறார் சசிகலா. தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் சசிகலாவுக்கு அமமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அமமுக நிர்வாகிகளிடம் தினகரன் கேட்டுள்ளார்.

 

Petition seeking permission to welcome Sasikala by sprinkling flowers by helicopter!

 

இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும், அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியைப் பறிகொடுத்த ஜெயந்தி பத்மநாபன், பிப்ரவரி 3 ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முக சுந்தரத்திடம் ஒரு மனுவைத் தந்துள்ளார். அதில், ‘சசிகலா தமிழகம் வருவதை முன்னிட்டு, மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்கவுள்ளேன். அப்போது தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க உள்ளேன். அதற்காக பிப்ரவரி 7 ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கேட்டு கடிதம் தந்துள்ளார்.

 

இந்தக் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கட்டும் என முதல்வர் அலுவலகத்தில் கேட்டுள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர்.

 

சுதந்தரத்திற்காக பாடுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகி வரும் தலைவரை வரவேற்பது போல், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை முடிந்து, அபராதம் செலுத்திவிட்டு வெளியே வரும் சசிகலாவை வரவேற்க இப்படியெல்லாமா ஏற்பாடு செய்வார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.