Petition to Collector seeking ban on Isha Center graveyard

கோவையில் பல்வேறு பகுதியில் ஈசா மையத்தின் மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. இன்னும் கூடுதலாக மின் மயானங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முன்னதாக.. ஈஷா யோகா மையம் ஒரு மதம் சார்ந்த அமைப்பாக இருப்பதால்.. குறிப்பிட்ட சடங்குகளைப் பின்பற்றும்படி மக்களை கட்டாயப்படுத்தக்கூடும் என்று பொதுவாக குற்றம்சாட்டப்பட்டது.

Advertisment

இதற்கிடையில், ஈஷா யோகா மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எந்தவொரு பாரம்பரியத்தையும், வழக்கத்தையும் பின்பற்ற யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், சுடுகாட்டில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சடங்குகளைப் பின்பற்றலாம் என்றும் கூறினார். நகரத்தில் ஈஷா நடத்தும் தகன அறைகளை அனைத்து சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் பயன்படுத்துகின்றனர், இதுவரை யாரும் புகார் செய்யவில்லை,” என்றார்.

Advertisment

இந்நிலை செம்மேடு பகுதியில் ஈஷாயோகா நிறுவனம் சார்பில் இக்கரை போளுவம்பட்டி பகுதியில், மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அவர்கள் கூறுகையில், அப்பகுதியில் ஏற்கனவே சுடுகாடும், இடுகாடும் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், ஈஷாவில் மர்ம மரணங்கள் தொடர்வதாகவும் இது குறித்து பலமுறை போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், வேண்டுமென்றே மின் மயானம் அமைய உள்ளதாக குறிப்பிட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஈஷாவின் மின் மயான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மேலும் அங்கு ஈஷாவின் மின் மயானம் அமைந்தால் அனைத்து அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் இக்கரை போலுவம்பட்டி கிராமத்தில், ஈஷாயோகா சார்பில் அமைய உள்ள மின் மயானத்திற்கு, தடை விதிக்க கோரி.. பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment