Skip to main content

ரத்தக் கரையான ரயில் நிலையம்; திணறடிக்கும் திருவாலங்காடு சம்பவம்!

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

person was arrested for trampling at Thiruvalangadu railway station

 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதிக்கு அருகே உள்ளது திருவாலங்காடு ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் இர்ஃபான். 20 வயதான இவர், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே, இர்ஃபானுடன் சேர்ந்து அரக்கோணத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக இர்ஃபான் மற்றும் மூர்த்திக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கஞ்சா விற்ற பணத்தில் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இர்ஃபான் தரப்பினருக்கும் மூர்த்தி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால், விரக்தியடைந்த மூர்த்தி, இர்ஃபானை கொலை செய்ய வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளார். 

 

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி காலை 11 மணியளவில் இர்ஃபான் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள், பள்ளிப் படிப்பை முடிக்காத கார்த்திக் மற்றும் விஷால் ஆகிய நான்கு பேருடன் அந்த ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த சமயம், திடீரென இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூர்த்தி மற்றும் அவரது அடியாட்களும் தான் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் இர்ஃபானை சரமாரியாக வெட்டியுள்ளனர். 

 

person was arrested for trampling at Thiruvalangadu railway station

 

ஒருகணம், இதில் அதிர்ச்சியடைந்த இர்ஃபான், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்குமாய் ஓட்டம் பிடித்துள்ளார். ஆனாலும் விடாத மூர்த்தி ஆட்கள், இர்ஃபானை துரத்திச் சென்று ரயில்வே அலுவலகத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, அங்கிருந்த அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இர்ஃபானை கொலை செய்ய துரத்தியவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். இத்தகைய சூழலில், அங்கு போலீஸ் வருவதைப் பார்த்து அவர்கள் தப்பிக்கும் போது, அதில் மூர்த்தி என்பவரை போலீசார் பிடித்துள்ளனர். 

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் பயணிகள் கூடும் ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.