Published on 21/10/2020 | Edited on 21/10/2020
தொழில் தொடங்க ஒற்றை சாளர அனுமதிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. திருப்பூர், நாமக்கல், கோவை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 26 திட்டங்கள் மூலம் 25,213 கோடி தொழில் முதலீடுகள் கிடைக்கும் எனவும், இந்த தொழில் திட்டங்கள் மூலம் 49,033 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் விரைந்து உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.