Skip to main content

பெரியார் பல்கலை. முறைகேடு புகார்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

 Periyar University Complaint of malpractice Higher Education Action Order

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம் மற்றும் அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் முறைகேடுகள் எனத் தொடர்ச்சியாக 37 குற்றச்சாட்டுகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் உயர் கல்வித்துறை சார்பில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் கொண்ட குழுவினர் ஏற்கனவே பல்கலைக்கழக  ஆவணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி, மார்ச் 6 ஆம் தேதி, ஏப்ரல் 27 ஆம் தேதி, மே 29 ஆம் தேதி என நான்கு நாட்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது 37 குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய பெரியார் பல்கலைக்கழக அலுவலர்கள், துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேலு ஆகியோரிடமும் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பிலிருந்து பதில் அறிக்கையும் பெறப்பட்டது. மேலும் முறைகேடு தொடர்பாக ஆவணங்களை விசாரணை குழுவினர் கேட்டிருந்தனர். அப்போது துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேலு ஆகியோர் தங்களிடம் இருக்கும் ஆவணங்களை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கிறோம் எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை விசாரணைக் குழுவிடம் பல்கலைக்கழக தரப்பிலிருந்து ஆவணங்கள் ஏதும் ஒப்படைக்கப்படவில்லை.

 

இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கான ஆவணங்களை 2 வாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும், பதிவாளருக்கும் தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக், 20 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அரசிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும், மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Promotion for IAS officers

 

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ”மணிவாசன் ஐஏஎஸ் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். தீரஜ்குமார் ஐஏஎஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். விஜயகுமார் ஐஏஎஸ் நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். சுனில் பாலிவால் ஐஏஎஸ் சென்னை துறைமுக ஆணையத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உத்தரவின் மூலம் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் பணியாற்றி வரும் அதே துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் தகுதியில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; தன்னார்வலர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Mikjam storm damage; Chief Minister M.K.Stal's call for volunteers

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் (HELP DESK) சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Mikjam storm damage; Chief Minister M.K.Stal's call for volunteers

 

அதே சமயம் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை உதவி ஆணையர் ஷேக் மன்சூரின் 9791149789 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் பாபுவின் 9445461712 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் சுப்புராஜ் 9894540669என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், பொதுவாக 7397766651 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

எனவே நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பதிவு செய்து கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்