
கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு என்ற பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்களால்பெரியார் சிலைக்கு தீ வைக்கப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு சமத்துவபுரத்தில் பெரியாரின் வெங்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இன்று காலை அந்த சிலையானது எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைத்தனர். சிலையின் மீது டயர் அணிவித்துதீ வைக்கப்பட்டு இருந்தது பின்னர் தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடியநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)