chennai high court

உடல்நலக் குறைவைக் கருத்தில் கொண்டு, ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அதில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், கடந்த 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆவணங்களை இன்று தாக்கல் செய்யாததால், வரும் திங்கள்கிழமைக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment