PERAMBALUR INCIDENT LODGE

பெரம்பலூர் நகரில் உள்ளது வெங்கடேசபுரம் நகர். அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த முறையற்ற தொடர்பில் இருந்த இருவர்இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

காலை நீண்ட நேரம் வரை கதவை திறக்கவில்லை அதையடுத்து அந்த லாட்ஜ் ஊழியர்கள் பலமாக கதவைத்தட்டி திறக்குமாறு அழைத்துள்ளனர். நீண்டநேரம் இருவரும் கதவு திறக்காததால் பெரம்பலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று காவல்துறையினர் உதவியுடன் அந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. உள்ளே ஒரு ஆண் ஒரு பெண் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அந்தப் பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

Advertisment

இதையடுத்து உயிருடன் உள்ள ஆணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் யார் பெரம்பலூரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இதற்கு காரணம் என்ன இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்தனர்.அவர்களின் விசாரணையில், அந்த ஆண் சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த 45 வயது மகேந்திரன் என்பதும்,இறந்துபோன பெண் துறையூர் அருகே உள்ள எரக்குடி என்ற ஊரைச் சேர்ந்த பூங்கொடி என்பதும்,இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது சென்னை கே.கே நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார் என்பதும்தெரிந்தது. அந்த ஓட்டலுக்கு அடிக்கடி சாப்பிட செல்லும் மகேந்திரன் பூங்கொடியுடன் அறிமுகமாகிஇருவரும்முறையற்றதொடர்பில்இருந்துவந்துள்ளனர்.

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் பூங்கொடி.சில நாட்கள் கூட பிரிந்திருக்க முடியாத மகேந்திரன் அவரை பின்தொடர்ந்து வந்தவர், பூங்கொடியை அவரது ஊரில் இருந்து பெரம்பலூருக்கு வரவழைத்து கடந்த 17-ஆம் தேதி அந்த தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

Advertisment

அங்கிருந்தபடியே திருச்சி, சமயபுரம்,கல்லணை, முக்கொம்பு ஆகிய பகுதிகளுக்கு ஜாலியாக சென்று சுற்றிப்பார்த்து விட்டு இரவு நேரத்தில் பெரம்பலூர் விடுதிக்குவந்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவல் அவரவர்கள் வீடுகளுக்கும் தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இரு குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக இருவரும் விஷம் அருந்தி இறப்பது என்று முடிவு செய்து அதன்படி நேற்று இரவு விடுதி அறையில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளனர்.இதில் பூங்கொடி இறந்து போனார். மகேந்திரன் தீவிர சிகிச்சையில் உள்ளார். மகேந்திரனுக்கு மனைவிபிள்ளைகள் என குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் மகேந்திரன் திசைமாறி சென்றதன் விளைவு இப்போது இருகுடும்பத்தினரையும் அவமானத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.